- குழந்தைக்குத் தொடர்ந்து தாய்பால் கொடுக்க வேண்டும் .குழந்தை சப்பி குடிக்கும் போது தாய்க்கு நன்றாக பால் சுரக்கும் .
- குழந்தையின் முதல் 6மாதங்களுக்கு தாய்பால் மட்டும் கொடுத்தால் போதும் .வேறு எந்த திரவமே ,தண்ணிரே கொடுக்க வேண்டாம் .
- வெயில் காலமாக இருந்தாலும் தாய்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது அவசியமில்லை . குழந்தைக்கு தேவையான தண்ணீர் தாய் பாலில் உண்டு .
- குழந்தைக்குத் தேவைப்படும் போதெல்லாம் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கலாம் .
- குழந்தை நோயுறும் போதும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் .
- குழந்தை சரியாக தாயின் மார்பகத்தை கவ்வி , சப்பிக் குடித்தால் தான் குழந்தைக்கு போதுமான பால் குடிக்க முடியும் . இதற்கு குழந்தையின் முகவாய்க் கட்டை மார்பகத்தைத் தொட வேண்டும் .குழந்தையின் வாய் நன்றாக திறந்திருக்க வேண்டும் .கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும் .
- மார்பக காம்பின் கீழ்பகுதி முழுவதும் குழந்தையின் வாய்க்குள் இருக்க வேண்டும் .
- பால் குடிக்கும் போது தாய்க்கு வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் .