நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள்
- காலையில் ஆசனம் , மாலையில் உடற்பயற்சி ,இடைப்பட்ட நேரத்தில் தியானம் நாள்தோறும் செய்ய பழக வேண்டும் .ஆசனப் பயிற்சி உடலின் உள் உறுப்புகளை நலம் பெறச் செய்யும் ,உடற் பயிற்சி உடலின் புற உறுப்புகளை வலுபெற செய்யும் ,தியானம் உள்ளதை தூயைமையகவும் ,மனதை தெளிவாகவும் செய்யும் .
- காலையில் இஞ்சி ,நண்பகல் சுக்கு ,மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால் .வாதம் ,பித்தம் ,ஆகிய நோய்கள் இன்றி வாழலாம் .
- காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதும் ,இரவில் சீக்கிரம் உறங்குவதும் நோய் தீர்க்கும் அன்றாட நடை முறைகள் ஆகும் .
- ஒரு நாளைக்கு இருவேளை உணவு உண்டால் போதும். நினைத்த பொழுது எல்லாம் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் .
- பசித்து உணவு உண்ணவேண்டும் .சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பதும் நல்லது .
- மலம் ,ஜலத்தை உரிய நேரத்தில் வெளியிடமால் அடக்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது .
- புகையிலை சுருட்டு பொடி,முதலான தீய பழக்க வழக்கங்களை தவிர்ப்பதும் நல்லது .
- வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து இள வெந்நீரி ல் குளிக்க வேண்டாம் .மாதம் இரு முறை உண்ணா நோன்பையும் இருத்தல் நல்லது .
- கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெருந்தாகம் எடுத்தாலும் தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் .
- அளவுக்கு அதிகமான உப்பு நோயைத் தருவாதகும் . உப்பு அது தப்பு என்பது இயற்க்கை மருத்துவர்களின் அறிவுருதலாகும் .
- காலையிலும் மாலையிலும் நடைப்பயிர்ச்சி மேற்கொண்டால் மருத்துவமனை நோக்கி நடப்பதை பெரும் அளவில் தவிர்க்கலாம் .
- உணவு வகைகளில் சோற்றைக் குறைவாகும் ,அதிகமாக கீரைகளையும் ,காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் .
- கீழ்க்கண்ட வேண்டாத மன உணர்வுகள் நீக்குவது நல்லது . காமம் ,பகை ,பிறர்க்கு உதவாமை,நான் என்னும் கர்வம் ,இருமணப் பெண்டிர் மீது பெரு விருப்பு, மனதளவில் விரதோம் ,பிறரை இகழ்தல் ,பொறமை .
- உணவுக்கு பின் வெற்றிலை ,பாக்கு,சுண்ணாம்பு ,சுண்ணாம்பு சேர்த்து கொள்வது நல்லது வெற்றிலை உணவை விரைவாக செரிக்க செய்யும் .பாக்கு நுரையிரலில் ஏற்படும் சளிதொல்லையை தீர்க்கும் .சுண்ணாம்பு எலும்புகளுக்கு வலிமை சேர்த்து குடல் நோய்களை குணப்படுத்தும் .
- அதிக அளவு நீர்,கீரை வகை உணவுகளும் ,பழவகைகளும் மலச்சிக்கலை தீக்கும் .
- நாட்பட்ட உணவை உண்ணக்கூடாது .
- நண்பகலில் தூக்கம் ,இரவில் விழித்துஇருத்தல் நோயை விருந்து வைத்து அழைப்தாகும்.
- தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது .