குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அவர்களை நோயிலிருந்து பாதுகாக்கவும் மூன்று முக்கிய பாதுகாப்பு முறைகள் உதவுகின்றன .
1 .ஊட்டசத்து உணவு
2 .சுத்தம்
3 .தடுப்பூசி போடுதல் .
1 .ஊட்டசத்து உணவு
குழந்தைகளுக்கு அவர்களால் பெற முடிந்த அளவு அதிகஊட்டசத்து உணவு பெறுவதால் அவர்கள் நன்கு வளரவும் ,நோயின்றி வளர முடிகிறது என்பது முக்கிய கருத்தாகும் .
2 . சுத்தம்
3 .தடுப்பு ஊசிகள்
தடுப்பு ஊசிகள் மூலம் குழந்தைகளுக்கு நோய் வரமால் தடுக்கலாம் .உரிய காலத்தில் உரிய ஊசி போடுவதால் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள் .
IMMUNIZATION NEW SCHEDULE IN TAMILNADU
VACCINE SCHEDULE
1 .ஊட்டசத்து உணவு
2 .சுத்தம்
3 .தடுப்பூசி போடுதல் .
1 .ஊட்டசத்து உணவு
குழந்தைகளுக்கு அவர்களால் பெற முடிந்த அளவு அதிகஊட்டசத்து உணவு பெறுவதால் அவர்கள் நன்கு வளரவும் ,நோயின்றி வளர முடிகிறது என்பது முக்கிய கருத்தாகும் .
- முதல் 6 மாதங்களுக்கு குழந்தைக்கு தாய் பாலே சிறந்தது வேற எதுவும் தேவை இல்லை
- ஆறு மாதங்கள் முதல் ஒரு மாதம் வரை தாய் பால் மற்றும் பிற இதர சத்துணவுகள் அதாவது பீன்ஸ் ,முட்டை, மாமிசம் ,வேகவைத்த பழங்கள்,காய்கறிகள் தானியங்கள் ,அடிக்கடி சிறிதளவு உணவு , ஊட்டிகொண்டிருக்கவும் .
- 1 வருடம் முதல் கொடுக்கும் எல்லா உணவுகளும் உடல் வளர்க்கும் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளை கொடுக்க வேண்டும் .குறிப்பாக பால் மற்றும் பாலிலிருந்து தயாராகும் உணவுகள் ,முட்டை , கோழி,மீன் ,மாமிசம், பீன்ஸ் ,பயறுகள் ,கொட்டைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் இடம் பெற வேண்டும் .இவைகளை சரிவிகித உணவாக்குவதர்க்கு சக்தி தரும் உணவுகளான அரிசி ,சோளம், கோதுமை ,உருளை ,போன்றவற்றுடன் கலந்து கொடுக்கவும் . குறைந்த அளவு உணவை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.(ஒரு நாளைக்கு 5 முதல் 6 தடவை ).
- குழந்தைக்கு ஒரு சிறிய கிண்ணம் நிறைய ஓரே நேரத்தில் கொடுக்கவும்.
- குழந்தைகளின் உணவில் மசாலா சேர்க்ககூடாது .
- உணவுடன் 1 தேக்கரண்டி நெய் /வெண்ணெய் சேர்க்கலாம் .
- குழந்தைக்கு போதுமான உணவு கொடுக்க வேண்டும் .
- பெற்றோர் குழந்தைளின் ஊட்டசத்து குறைவான நோயின் அறிகுறிகளை கவனித்து ,அவர்களால் முடிந்த அளவு சிறந்த உணவை அளிக்க வேண்டும் .
2 . சுத்தம்
- குழந்தைகளை தினமும் குளிப்பாட்டி சுத்தமான ஆடைகளை உடுத்தி விடவும் .
- குழந்தைகளை தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தல் மற்றும் மலம் கழித்த பின்பு கைகளை நன்கு சுத்தம் செய்ய கற்று கொடுக்க வேண்டும் .
- உணவுஉண்ணும் முன்பும் ,உணவுகளைத் தொடும் முன்பும்
- கைகளை நன்கு சுத்தம் செய்ய கற்று கொடுக்க வேண்டும் .
- கழிவறை பயன்படுத்த கற்று கொடுக்கவும்.
- குழந்தைகளை வெறும் கால்களுடன் செல்ல அனுமதிக்க வேண்டாம் .
- காலையும் மாலையும் பல் துலக்க கற்று கொடுக்க வேண்டும் .
- அதிகமான இனிப்பு ,குளிர்பானங்கள் ,கொடுக்க வேண்டாம் .இனிப்பு சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும் .
- குறைந்த அளவு இருக்கும் படி நகங்களை வெட்டி விடவும் .
- புண்கள் சொறி சிரங்கு ,பேன்கள்,படர்தாமரை , உள்ள குழந்தைகளுடன் சேர விட வேண்டாம் . ஓரே உடைகளையும் துண்டையும் பயன்படுத்த கூடாது .
- அழுக்கு பொருட்களை வாயில் வைக்கவோ ,நாய்களை முகத்தில் நக்க விடவோ குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் .
- நாய் ,கோழிகளை, பூனைகளை ,வீட்டிற்க்கு வெளியில் மட்டும் வைக்கவும் .
- குடிப்பதற்கு கொதித்த நீரை பயன்படுத்தவும் .
3 .தடுப்பு ஊசிகள்
தடுப்பு ஊசிகள் மூலம் குழந்தைகளுக்கு நோய் வரமால் தடுக்கலாம் .உரிய காலத்தில் உரிய ஊசி போடுவதால் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள் .
IMMUNIZATION NEW SCHEDULE IN TAMILNADU
VACCINE SCHEDULE
BCG,Hep B Birth dose,
OPV O dose At birth
Pentavalent(DPT+HepB+Hib) OPV 6weeks
Pentavalent(DPT+HepB+Hib) OPV 10weeks
Pentavalent(DPT+HepB+Hib) OPV 14weeKS
Measles 1 dose 9months
DPT Booster,OPV Booster,Measles 2dose 16-24 Months