Friday, 25 May 2012

ஆரோக்கியம் தரும் மிளகு

 மிளகில்  உள்ள  சத்துக்கள் 

தாது  உப்புகள் 

கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு


வைட்டமின்கள் 

தயாமின்
ரிபோபிலவின்
ரியாசின்


  சளி   தொல்லைக்கு 

  •   மிளகை  நன்றாக  பொடித்து  அதனை  தேனுடன்   கலந்து சாப்பிட்டு  வர  சளி தொல்லைகள்  மற்றும் சளியினால்  ஏற்படும்  தொல்லைகளான மூக்கு  ஒழுகுதல்  குணமாகும் .

  • அதிகமாக  சளி தொல்லைகள்  உள்ளவர்கள்  மிளகை  நெய்யில்  வறுத்து  பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று  வேளை  சாப்பிட்டு  வர  குணமாகும் .

  • கொஞ்சம்  மிளகு ,ஓமம் ,உப்பு   சேர்த்து  மென்று  சாப்பிட்டு  வந்தால் தொண்டை வலி  குணமடையும் .

  • கல்யாணமுருங்கை  இலையுடன், அரிசி  சிறிது   மிளகு  சேர்த்து  அரைத்து தோசை  செய்து  சாப்பிட்டு  வர சளி  குணமாகும் .



பற்களுக்கு 

  • மிளகுடன்  உப்பு  சேர்த்து  பல்  துலக்கினால்  பல்வலி , சொத்தை பல் ,ஈறுவலி ,ஈறுகளிலிருந்து இரத்தம்  வடிதல் குணமாகும் ,பற்களும்  வெண்மையாக  இருக்கும் ,வாயில்  துர்நாற்றத்தை  போக்கும் .

தலைவலி 

  • மிளகுடன்  வெல்லம்  சேர்த்து  காலையும்  மாலையும்  சாப்பிட்டு வந்தால்  தலைவலி ,தலை  பாரம்  குணமாகும் .

  • மிளகை  அரைத்து  அதனை  தலையில்  பற்று  போட்டால்  தலை  வலி  குணமாகும் .

  • மிளகை  சுட்டு  அதன் புகையினை இழுத்தால் தலைவலி  தீரும்.

இரத்தசோகைக்கு 

கல்யாணமுருங்கை  இலை, முருங்கை  இலை ,மிளகு  மற்றும்  பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை  குணமாகும் .


பசியின்மைக்கு 

  • ஒரு  ஸ்பூன் அளவு மிளகை வறுத்து  பொடி  செய்து அதனுடன்  கைபிடியளவு துளசியை  சேர்த்து  கொதிக்க  வைத்து அதனை  ஆற  வைத்து அதனுடன்  சிறிது அளவு  தேன்  கலந்து  சாப்பிட்டு வர பசியின்மை  குணமாகும் மற்றும் வயிறு  உப்பசம்  குணமடையும் .

  • மிளகு வயிற்றில் உள்ள  வாய்வை அகற்றி உடலுக்கு  வெப்பத்தை தருவதோடு  வீக்கத்தை  கரைக்கும்  தன்மையுடையது  .

  • மிளகு  உணவை  எளிதில்  செரிக்க  வைக்கும்  தன்மை  கொண்டது .


  • மிளகு , சுக்கு ,திப்பிலி  சேர்த்து  சாப்பிட்டு வந்தால்  நோய்  எதிர்ப்பு  சக்தியை  அதிகரிக்கும் .

  • மிளகு  இரத்தத்தை  சுத்திகரிக்கும்  தன்மை  கொண்டது .

 






Friday, 4 May 2012

கேழ்வரகில் உள்ள சத்துகளின் அளவு




  • புரோட்டீன்   ----- 7.3 கிராம் 
  •  கொழுப்பு    ----- 1.3  கிராம் 
  • மாவு பொருட்கள்  --- 72  கிராம் 
  • கால்சியம்       ------ 344 கிராம் 
  • நார்சத்து   -------  3.6  கிராம் 
  • இரும்பு  சத்து  ----- 3.6  கிராம் 

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

 
 
 
 
 
 
 
  • கேழ்வரகில்  கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .
 

    • பாலில்  உள்ள கால்சியத்தை  விட  இதில் அதிகம் உள்ளன .
    • கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .

    • நோய்  எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .

    • உடல் சூட்டை  தனிக்கும் .

    • குழந்தைகளுக்கு  கேழ்வரகுடன்  பால் ,சர்க்கரை  சேர்த்து  கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .

    • தினம் கேழ்வரகு  கூழ்  சாப்பிட்டு வர குடற்புண்  குணமடையும் .

    • மாதவிடாய்  கோளாறு  கொண்ட பெண்கள்  இதை சாப்பிட்டு வர குணமடையும் .

    • கேழ்வரகு  சாப்பிட்டால் உடல் எடை குறையும் .

    • கேழ்வரகில்  உள்ள  நார்  சத்துக்கள் மலசிக்கலை  தடுக்கிறது .

    • இது  ஜீரணமாகும்  நேரம்  எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை

    • நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை  நோயாளிகள்  கேழ்வரகை  ,அடை ,புட்டாக , செய்து  சாப்பிடலாம் . கூழ்  அல்லது  கஞ்சியாக  சாப்பிடக்கூடாது  .இது சிக்கிரம்  ஜீரணம்  அடைந்து விடும் கூழாக  குடிக்கும் போது .

    • கொலஸ்டிராலை  குறைக்கும் .

    • இதில்  இரும்பு  சத்து அதிகம்  உள்ளது  இது இரத்த சோகை  நோய்  வரமால்  தடுக்கிறது .

    • இதில் அதிக அளவு  கால்சியம் ,இரும்பு  சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள்  தினம் உணவில் சேரத்து  கொள்ளலாம் .

    குறிப்பு :  இதில் ஆக்ஸாலிக்  அமிலம்  அதிகம்  உள்ளதால் ,சிறுநீரக  கற்கள் உள்ளவர்கள்  இதை தவிர்ப்பது  நல்லது .

    Tuesday, 1 May 2012

    பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஆலோசனை


    • குழந்தைக்குத்  தொடர்ந்து தாய்பால் கொடுக்க வேண்டும் .குழந்தை சப்பி குடிக்கும் போது தாய்க்கு நன்றாக பால் சுரக்கும் .


    • குழந்தையின் முதல் 6மாதங்களுக்கு   தாய்பால் மட்டும் கொடுத்தால் போதும் .வேறு எந்த திரவமே  ,தண்ணிரே கொடுக்க  வேண்டாம் .



    • வெயில் காலமாக இருந்தாலும் தாய்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது அவசியமில்லை . குழந்தைக்கு தேவையான தண்ணீர்  தாய் பாலில் உண்டு .

    • குழந்தைக்குத்  தேவைப்படும் போதெல்லாம்  அடிக்கடி தாய்ப்பால்  கொடுக்கலாம் .
    இரவிலும்  தாய்ப்பால் கொடுக்க  வேண்டும் .ஒருநாளில்  8 முறையாவது  தாய்ப்பால்  கொடுக்க  வேண்டும் .

    • குழந்தை நோயுறும் போதும்  தொடர்ந்து  தாய்ப்பால் கொடுக்க   வேண்டும் .

    • குழந்தை சரியாக தாயின்  மார்பகத்தை கவ்வி , சப்பிக்  குடித்தால்  தான் குழந்தைக்கு  போதுமான  பால் குடிக்க  முடியும் . இதற்கு குழந்தையின் முகவாய்க்  கட்டை  மார்பகத்தைத்  தொட  வேண்டும் .குழந்தையின்  வாய் நன்றாக  திறந்திருக்க வேண்டும் .கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும் .

    • மார்பக காம்பின்  கீழ்பகுதி முழுவதும்  குழந்தையின்  வாய்க்குள் இருக்க வேண்டும் .

    • பால் குடிக்கும் போது  தாய்க்கு வலி  இருந்தால் உடனே  மருத்துவரை  அணுக  வேண்டும் .

    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

     
    Design by Free WordPress Themes