Friday, 19 April 2013

இஞ்சியின் மருத்துவகுணம்

 

 
 
 
 
 
 
 

ஜீரண கோளாறு

 

இஞ்சி , மிளகு  இரண்டையும்   அரைத்து  சாப்பிட்டு வர ஜீரணம்  ஏற்படும் .


தொப்பை  குறைய 

தினம்  காலையில்  வெறும்  வயிற்றில் இஞ்சி சாறுடன்  தேன்  கலந்து  சூடாக்கி  குடித்து வர  தொப்பைக் குறையும் .

வயிறு  சம்பந்தமான  கோளாறுகளுக்கு 


இஞ்சியை  வதக்கி  அதனுடன்  தேன்  கலந்து  சிறிது  நீர்  வீட்டு  கொதிக்க  வைத்து  அந்த நீரை காலை  மாலை  குடித்து  வர  வயிற்று  போக்கு  குறையும் .

இஞ்சியை  அரைத்து  அதை  நீரில்  கலந்து  தெளிந்த  நீருடன்  துளசி  சாற்றை  கலந்து  ஒரு கரண்டி  வீதம்  ஒரு  வாரம்  குடித்து  வர  வாய்வுத்  தொல்லை  நீங்கும் . 

இஞ்சி சாறில்  எலுமிச்சை  சாறு  கலந்து சாப்பிட்டு  வந்தால்  பசி  நன்றாக  எடுக்கும் .


இஞ்சி  சாப்பிடுவதால்  மலசிக்கல்  வரமால்  தடுக்கிறது .



 குறிப்பு 


இஞ்சியின்  தோல் பகுதி  மட்டும்  நஞ்சு  அதனை  நீக்கி  விட்டு  சாப்பிட  வேண்டும் .

இரத்தத்தின்  அடர்த்தியை  குறைக்கும்  ஆஸ்பிரின்  போன்ற மாத்திரை  சாப்பிடுவர்களும் 

 

 





இரத்த அழுத்ததை குறைக்கும் தர்பூசணி பழத்தின் படங்கள்







                                                                                                        
                                                                             
                      



 

Wednesday, 13 March 2013



உங்களை சர்க்கரை நோய் பாதிக்குமா 







   1.உயர் இரத்த அழுத்தம்         

 

 

2.உடற்பயிற்சியின்மை 

 

 

 

3.அதிக அதிக எடை 

 

 

 

4.ஆரோக்கியமற்ற  உணவு 

 

 

 

5.  முதிய வயது 

 

 

6.கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் 

 

7.குழந்தையின் பிறப்பு எடை 4 கிலோவிற்கு மேல் இருத்தல்                                        

 

 

 




















                                    















 

Tuesday, 12 March 2013

            இதயம்    காக்கும்  பஞ்ச தந்திரம் 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1.அளவான   உப்புடன் சத்தான  உணவு 

 
 
 
                                              
 
 
 
 

2.உயரத்திர்ற்கேற்ற எடை 

 
 
 
                                                          

 

3.புகை பழக்கமின்மை 

 
 
 
                                           
 
 

4.சுறுசுறுப்பான உடல் இயக்கம் 

 
 
 
 
                                              
 
 

5.மகிழ்ச்சியான  உள்ளம் 

 
 
 
 
                                             

 

 
 
 
 

Saturday, 22 September 2012

ஆரோக்கியமான உணவுக்கு 5 வழிகள்


ஆரோக்கியமான  உணவுக்கு 5 வழிகள்



உணவு தயாரிக்கும் முன்பு கைகளை நன்றாக கழுவி சுத்தபடுத்தவும்

கழிவறையை உபயோகித்த  பின் கைகளை நன்றாக தேய்த்துக் கழுவவும்

சமையலுக்கு உபயோகிக்கும் இடங்களை / பாத்திரங்களை கிருமிகள் இல்லமால் சுத்தபடுத்தவும் .

சமையல் அறை  / சமையல் பொருட்களை  ஈ , எறும்பு ,கரப்பான் பூச்சிகள்  மற்றும் செல்ல பிராணிகள் அணுகாமல் பாதுகாக்கவும் .



சமைத்த / சமைக்காத உணவுப் பொருட்களை தனித் தனியே  வைக்கவும்


சமைக்காத அசைவ உணவை  ( கோழி ,ஆட்டிறைச்சி ,மீன்) சமைத்த
உணவுடன் கலக்காதீர் .

சமைக்காத மற்றும் சமைத்த உணவுகளுக்கு தனித் தனிப் பாத்திரங்களை உபயேகிக்கவும் .



முழுமையாக சமைக்கவும்

உணவு அதிலும் கோழி ,முட்டை ,இறைச்சி வகைகள் , மீன் போன்றவற்றை  முழுமையாக சமைக்கவும் .


உணவை சரியான சூட்டில் வைக்கவும்


சமைத்த உணவை 3 மணிநேரத்திற்கு மேல் அறையின் சூட்டில் வைக்காதீர் .

எளிதில் கெட்டுப்  போகக்கூடிய உணவை குளிர்சாதனப் பெட்டியில் 5 டிகிரி செல்சியஸ்க்கு  கீழே வைக்கவும்.

பரிமாறும் முன் சமைத்த உணவை ஆவி பறக்கும் சூட்டில் 60 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வைக்கவும் .


சுத்தமான நீர் , உணவுப் போர்டுகளையே






Friday, 25 May 2012

ஆரோக்கியம் தரும் மிளகு

 மிளகில்  உள்ள  சத்துக்கள் 

தாது  உப்புகள் 

கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு


வைட்டமின்கள் 

தயாமின்
ரிபோபிலவின்
ரியாசின்


  சளி   தொல்லைக்கு 

  •   மிளகை  நன்றாக  பொடித்து  அதனை  தேனுடன்   கலந்து சாப்பிட்டு  வர  சளி தொல்லைகள்  மற்றும் சளியினால்  ஏற்படும்  தொல்லைகளான மூக்கு  ஒழுகுதல்  குணமாகும் .

  • அதிகமாக  சளி தொல்லைகள்  உள்ளவர்கள்  மிளகை  நெய்யில்  வறுத்து  பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று  வேளை  சாப்பிட்டு  வர  குணமாகும் .

  • கொஞ்சம்  மிளகு ,ஓமம் ,உப்பு   சேர்த்து  மென்று  சாப்பிட்டு  வந்தால் தொண்டை வலி  குணமடையும் .

  • கல்யாணமுருங்கை  இலையுடன், அரிசி  சிறிது   மிளகு  சேர்த்து  அரைத்து தோசை  செய்து  சாப்பிட்டு  வர சளி  குணமாகும் .



பற்களுக்கு 

  • மிளகுடன்  உப்பு  சேர்த்து  பல்  துலக்கினால்  பல்வலி , சொத்தை பல் ,ஈறுவலி ,ஈறுகளிலிருந்து இரத்தம்  வடிதல் குணமாகும் ,பற்களும்  வெண்மையாக  இருக்கும் ,வாயில்  துர்நாற்றத்தை  போக்கும் .

தலைவலி 

  • மிளகுடன்  வெல்லம்  சேர்த்து  காலையும்  மாலையும்  சாப்பிட்டு வந்தால்  தலைவலி ,தலை  பாரம்  குணமாகும் .

  • மிளகை  அரைத்து  அதனை  தலையில்  பற்று  போட்டால்  தலை  வலி  குணமாகும் .

  • மிளகை  சுட்டு  அதன் புகையினை இழுத்தால் தலைவலி  தீரும்.

இரத்தசோகைக்கு 

கல்யாணமுருங்கை  இலை, முருங்கை  இலை ,மிளகு  மற்றும்  பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை  குணமாகும் .


பசியின்மைக்கு 

  • ஒரு  ஸ்பூன் அளவு மிளகை வறுத்து  பொடி  செய்து அதனுடன்  கைபிடியளவு துளசியை  சேர்த்து  கொதிக்க  வைத்து அதனை  ஆற  வைத்து அதனுடன்  சிறிது அளவு  தேன்  கலந்து  சாப்பிட்டு வர பசியின்மை  குணமாகும் மற்றும் வயிறு  உப்பசம்  குணமடையும் .

  • மிளகு வயிற்றில் உள்ள  வாய்வை அகற்றி உடலுக்கு  வெப்பத்தை தருவதோடு  வீக்கத்தை  கரைக்கும்  தன்மையுடையது  .

  • மிளகு  உணவை  எளிதில்  செரிக்க  வைக்கும்  தன்மை  கொண்டது .


  • மிளகு , சுக்கு ,திப்பிலி  சேர்த்து  சாப்பிட்டு வந்தால்  நோய்  எதிர்ப்பு  சக்தியை  அதிகரிக்கும் .

  • மிளகு  இரத்தத்தை  சுத்திகரிக்கும்  தன்மை  கொண்டது .

 






Friday, 4 May 2012

கேழ்வரகில் உள்ள சத்துகளின் அளவு




  • புரோட்டீன்   ----- 7.3 கிராம் 
  •  கொழுப்பு    ----- 1.3  கிராம் 
  • மாவு பொருட்கள்  --- 72  கிராம் 
  • கால்சியம்       ------ 344 கிராம் 
  • நார்சத்து   -------  3.6  கிராம் 
  • இரும்பு  சத்து  ----- 3.6  கிராம் 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes