Friday, 25 May 2012

ஆரோக்கியம் தரும் மிளகு

 மிளகில்  உள்ள  சத்துக்கள் 

தாது  உப்புகள் 

கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு


வைட்டமின்கள் 

தயாமின்
ரிபோபிலவின்
ரியாசின்


  சளி   தொல்லைக்கு 

  •   மிளகை  நன்றாக  பொடித்து  அதனை  தேனுடன்   கலந்து சாப்பிட்டு  வர  சளி தொல்லைகள்  மற்றும் சளியினால்  ஏற்படும்  தொல்லைகளான மூக்கு  ஒழுகுதல்  குணமாகும் .

  • அதிகமாக  சளி தொல்லைகள்  உள்ளவர்கள்  மிளகை  நெய்யில்  வறுத்து  பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று  வேளை  சாப்பிட்டு  வர  குணமாகும் .

  • கொஞ்சம்  மிளகு ,ஓமம் ,உப்பு   சேர்த்து  மென்று  சாப்பிட்டு  வந்தால் தொண்டை வலி  குணமடையும் .

  • கல்யாணமுருங்கை  இலையுடன், அரிசி  சிறிது   மிளகு  சேர்த்து  அரைத்து தோசை  செய்து  சாப்பிட்டு  வர சளி  குணமாகும் .



பற்களுக்கு 

  • மிளகுடன்  உப்பு  சேர்த்து  பல்  துலக்கினால்  பல்வலி , சொத்தை பல் ,ஈறுவலி ,ஈறுகளிலிருந்து இரத்தம்  வடிதல் குணமாகும் ,பற்களும்  வெண்மையாக  இருக்கும் ,வாயில்  துர்நாற்றத்தை  போக்கும் .

தலைவலி 

  • மிளகுடன்  வெல்லம்  சேர்த்து  காலையும்  மாலையும்  சாப்பிட்டு வந்தால்  தலைவலி ,தலை  பாரம்  குணமாகும் .

  • மிளகை  அரைத்து  அதனை  தலையில்  பற்று  போட்டால்  தலை  வலி  குணமாகும் .

  • மிளகை  சுட்டு  அதன் புகையினை இழுத்தால் தலைவலி  தீரும்.

இரத்தசோகைக்கு 

கல்யாணமுருங்கை  இலை, முருங்கை  இலை ,மிளகு  மற்றும்  பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை  குணமாகும் .


பசியின்மைக்கு 

  • ஒரு  ஸ்பூன் அளவு மிளகை வறுத்து  பொடி  செய்து அதனுடன்  கைபிடியளவு துளசியை  சேர்த்து  கொதிக்க  வைத்து அதனை  ஆற  வைத்து அதனுடன்  சிறிது அளவு  தேன்  கலந்து  சாப்பிட்டு வர பசியின்மை  குணமாகும் மற்றும் வயிறு  உப்பசம்  குணமடையும் .

  • மிளகு வயிற்றில் உள்ள  வாய்வை அகற்றி உடலுக்கு  வெப்பத்தை தருவதோடு  வீக்கத்தை  கரைக்கும்  தன்மையுடையது  .

  • மிளகு  உணவை  எளிதில்  செரிக்க  வைக்கும்  தன்மை  கொண்டது .


  • மிளகு , சுக்கு ,திப்பிலி  சேர்த்து  சாப்பிட்டு வந்தால்  நோய்  எதிர்ப்பு  சக்தியை  அதிகரிக்கும் .

  • மிளகு  இரத்தத்தை  சுத்திகரிக்கும்  தன்மை  கொண்டது .

 






Friday, 4 May 2012

கேழ்வரகில் உள்ள சத்துகளின் அளவு




  • புரோட்டீன்   ----- 7.3 கிராம் 
  •  கொழுப்பு    ----- 1.3  கிராம் 
  • மாவு பொருட்கள்  --- 72  கிராம் 
  • கால்சியம்       ------ 344 கிராம் 
  • நார்சத்து   -------  3.6  கிராம் 
  • இரும்பு  சத்து  ----- 3.6  கிராம் 

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

 
 
 
 
 
 
 
  • கேழ்வரகில்  கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .
 

    • பாலில்  உள்ள கால்சியத்தை  விட  இதில் அதிகம் உள்ளன .
    • கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .

    • நோய்  எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .

    • உடல் சூட்டை  தனிக்கும் .

    • குழந்தைகளுக்கு  கேழ்வரகுடன்  பால் ,சர்க்கரை  சேர்த்து  கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .

    • தினம் கேழ்வரகு  கூழ்  சாப்பிட்டு வர குடற்புண்  குணமடையும் .

    • மாதவிடாய்  கோளாறு  கொண்ட பெண்கள்  இதை சாப்பிட்டு வர குணமடையும் .

    • கேழ்வரகு  சாப்பிட்டால் உடல் எடை குறையும் .

    • கேழ்வரகில்  உள்ள  நார்  சத்துக்கள் மலசிக்கலை  தடுக்கிறது .

    • இது  ஜீரணமாகும்  நேரம்  எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை

    • நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை  நோயாளிகள்  கேழ்வரகை  ,அடை ,புட்டாக , செய்து  சாப்பிடலாம் . கூழ்  அல்லது  கஞ்சியாக  சாப்பிடக்கூடாது  .இது சிக்கிரம்  ஜீரணம்  அடைந்து விடும் கூழாக  குடிக்கும் போது .

    • கொலஸ்டிராலை  குறைக்கும் .

    • இதில்  இரும்பு  சத்து அதிகம்  உள்ளது  இது இரத்த சோகை  நோய்  வரமால்  தடுக்கிறது .

    • இதில் அதிக அளவு  கால்சியம் ,இரும்பு  சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள்  தினம் உணவில் சேரத்து  கொள்ளலாம் .

    குறிப்பு :  இதில் ஆக்ஸாலிக்  அமிலம்  அதிகம்  உள்ளதால் ,சிறுநீரக  கற்கள் உள்ளவர்கள்  இதை தவிர்ப்பது  நல்லது .

    Tuesday, 1 May 2012

    பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஆலோசனை


    • குழந்தைக்குத்  தொடர்ந்து தாய்பால் கொடுக்க வேண்டும் .குழந்தை சப்பி குடிக்கும் போது தாய்க்கு நன்றாக பால் சுரக்கும் .


    • குழந்தையின் முதல் 6மாதங்களுக்கு   தாய்பால் மட்டும் கொடுத்தால் போதும் .வேறு எந்த திரவமே  ,தண்ணிரே கொடுக்க  வேண்டாம் .



    • வெயில் காலமாக இருந்தாலும் தாய்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது அவசியமில்லை . குழந்தைக்கு தேவையான தண்ணீர்  தாய் பாலில் உண்டு .

    • குழந்தைக்குத்  தேவைப்படும் போதெல்லாம்  அடிக்கடி தாய்ப்பால்  கொடுக்கலாம் .
    இரவிலும்  தாய்ப்பால் கொடுக்க  வேண்டும் .ஒருநாளில்  8 முறையாவது  தாய்ப்பால்  கொடுக்க  வேண்டும் .

    • குழந்தை நோயுறும் போதும்  தொடர்ந்து  தாய்ப்பால் கொடுக்க   வேண்டும் .

    • குழந்தை சரியாக தாயின்  மார்பகத்தை கவ்வி , சப்பிக்  குடித்தால்  தான் குழந்தைக்கு  போதுமான  பால் குடிக்க  முடியும் . இதற்கு குழந்தையின் முகவாய்க்  கட்டை  மார்பகத்தைத்  தொட  வேண்டும் .குழந்தையின்  வாய் நன்றாக  திறந்திருக்க வேண்டும் .கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும் .

    • மார்பக காம்பின்  கீழ்பகுதி முழுவதும்  குழந்தையின்  வாய்க்குள் இருக்க வேண்டும் .

    • பால் குடிக்கும் போது  தாய்க்கு வலி  இருந்தால் உடனே  மருத்துவரை  அணுக  வேண்டும் .

    Tuesday, 17 April 2012

    தூய்மையில்லாத பற்கள் இதயத்தை பாதிக்கும் ?


    பல்லு போனால் சொல்லு போச்சு என்பதெல்லாம் அந்த காலம் , இன்று ஆரோக்கியமான உடல் மற்றும் இதயத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம் என்கிறது மருத்துவ உலகம் .

    பற்களில் படிந்து இருக்கும் ஆபத்தை உண்டாக்கும் பாக்டீரியக்கள் தொண்டைக்கு பரவி இரத்தத்துடன் கலந்து இதயத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது .


    பல் துலக்குவதன் மூலம் இதயத்தை பலபடுத்தலாம் என்கிறன்றனர் மருத்துவ நிபுணர்கள் .


    பல் சொத்தையின் அறிகுறிகள்


    •      பல்லில் வலி

    •      ஈறுகளில் வீக்கம்

    •      வாயின் வெளியே வீக்கம்

    •      பல் கருப்பு நிறமாக மாறுவது 

    •      பல்லில் குழி ஏற்பட்டு உணவு பொருட்கள் தங்குவது .

    •     குளிர்ந்த அல்லது சூடான  உணவு சாப்பிடும் போது பல்லில் கூச்சம் ஏற்படுவது .


    தவிர்க்க வேண்டியவை ?

    •      அடிக்கடி தேனீர் ,காபி போன்றவை குடிப்பது .

    •      குளிர்ந்த நீரை குடிப்பது .

    •      குளிர்பானங்கள்  குடிப்பது .

    •      அதிகம் ,இனிப்பு ,காரம் சாப்பிடுவது .

    •      பாக்கு ,பீடா போடுதல் ,சிகெரட்  புகைப்பது .

    •      மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் .



    ஆரோக்கியமான பற்களுக்கு

    •      தினம் இரண்டு முறை பல் துலக்குவது .

    •      இனிப்பான உணவு பொருட்களை சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும் .

    •      மூன்று அல்லது ஐந்து மாதத்திற்கு ஒரு முறை பிரசை மாற்ற வேண்டும் .


    •      ப்ளுரைடு உள்ள பற்பசைகளை பயன்படுத்த வேண்டும் .
       

    உறுதியான பற்களுக்கு ஆரோக்கியமான உணவு ?


    •      பற்கள் அயோடின் மற்றும் பாஸ்பரஸ் சத்து குறைவினால் விரைவில் வலுவிழக்கின்றன .இதை தடுக்க  பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும் . 

    •      வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு ,சாத்துக்குடி , எலுமிச்சை ,பப்பாளி ,திராட்ச்சை இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் சேர்த்து கொள்ள வேண்டும் .

    •     கேழ்வரகு ,மீன் ,கீரை வகைகள் ,முட்டைக்கோஸ்  காலிபிளவர் அடிக்கடி சேர்த்து கொள்ளவும் .

    •     தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் .

    •     தினம் 2 டம்பளர்  பால் அவசியம் .

    •     இனிப்பு ,உப்பு ,காரத்தை குறைக்கவும் .

    •     பூண்டு ,வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும் .

    •      வெண்டைக்காய்,வெள்ளரிக்காய் ,மாங்காய் .கேரட்களை பச்சையாக கடித்து தின்பதால் பற்கள் பலம் பெறும்.

    •     கால்சியம் சத்து அதிகம் உள்ள பால் , முட்டை சாப்பிடுவது பல்லுக்கு ஆரோக்கியமும் ,அழகும் ஏற்படும் .

         
        


    Sunday, 15 April 2012

    ஒரு வயது வரையிலான குழந்தையின் சரியான வளர்ச்சி படிகள்

    குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு வளர்ச்சி படிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் .ஒரு வயது வரை குழந்தையின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து குழந்தை சரியான முறையில் வளருகிறதா  என்பதை அறிந்து கொள்ளலாம் .ஒன்றரை மாதமானதும் கீழ்காணும் முன்னேற்றங்கள் குழந்தையின் வளர்ச்சியில் காணப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் .


    ஒன்றரை மாதம்

          ஒன்றரை மாதமானதும் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும் .


    இரண்டாவது மாதம்

          இரண்டாவது மாதமானதும் தாய் முகம் பார்த்து சிரிக்கும் .


    மூன்றாம் மாதம்


          மூன்றாம் மாதம் ஆனதும்  குழந்தை தலையைக் கொஞ்சம் தூக்கும் ,குரல் ஒலி வரும் திசையைத்  திரும்பி பார்க்கும் .


    நான்காவது மாதம்

         நாலாவது மாதம் குழந்தை புரளும் ,ஒருகளிக்கும் ,கையில்  கிடைத்த பொருட்களை பிடித்து கொள்ளும் .

     ஐந்து அல்லது ஆறா மாதம்


        ஐந்து அல்லது ஆறா மாதம் , குழந்தைத் தலையை உயர்த்தி கைகளை ஊன்றி எழும்ப முயற்ச்சிக்கும் .தலையணையில் சாய்த்து உட்கார வைக்கலாம் .


     எட்டாமாதம்

       எட்டாமாதம்   தலையைனையை முட்டு கொடுக்காமல் உட்கார வைக்க முடியும் .பற்கள் முளைக்க துவங்கும் .


    ஒன்பது அல்லது பத்தாம் மாதம்

       ஒன்பது அல்லது பத்தாம் மாதம் குழந்தை முழங்கால்களை ஊன்றி தவழத்  தொடங்கும் .


    பதினொன்று  அல்லது பன்னிரண்டாவது மாதத்தில்


         பதினொன்று அல்லது பண்ணிரண்டவாது மாதத்தில் ஓர் ஆதாரத்தைப் பிடித்து கொண்டு எழுந்து நிற்கும் .

    ஒன்று அல்லது ஒன்றைரை வயதில்

       ஒன்று அல்லது ஒன்றரை வயதில் குழந்தை பிடிப்பு ஏதும் இல்லமால் மெல்ல நடக்க தொடங்கும் . 














    கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாயகரமான அறிகுறிகள்?

    கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாய குறிகளை அறிந்து கொள்ள வேண்டும் .கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாயகுறி

    • கால்வீக்கம் 

    • கடுமையான இரத்த சோகை 

    • இரத்த கசிவு 

    • கடுமையான அடி  வயிற்று வலி .

    • தொடர்ந்து வாந்தி .

    • கடுமையான ஜுரம்  .

    • அடிக்கடி தலைவலி  .

    • வலிப்பு .

    • வயிற்றில்  குழந்தை அசைவு இல்லை ,அசைவு குறைவு அல்லது அசைவு அதிகம் .   இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் கர்ப்பிணிகள் மருத்துவ சிகிச்சை உடன பெற வேண்டும் .






     
    Design by Free WordPress Themes