Sunday, 15 April 2012

ஒரு வயது வரையிலான குழந்தையின் சரியான வளர்ச்சி படிகள்

குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு வளர்ச்சி படிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் .ஒரு வயது வரை குழந்தையின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து குழந்தை சரியான முறையில் வளருகிறதா  என்பதை அறிந்து கொள்ளலாம் .ஒன்றரை மாதமானதும் கீழ்காணும் முன்னேற்றங்கள் குழந்தையின் வளர்ச்சியில் காணப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் .


ஒன்றரை மாதம்

      ஒன்றரை மாதமானதும் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும் .


இரண்டாவது மாதம்

      இரண்டாவது மாதமானதும் தாய் முகம் பார்த்து சிரிக்கும் .


மூன்றாம் மாதம்


      மூன்றாம் மாதம் ஆனதும்  குழந்தை தலையைக் கொஞ்சம் தூக்கும் ,குரல் ஒலி வரும் திசையைத்  திரும்பி பார்க்கும் .


நான்காவது மாதம்

     நாலாவது மாதம் குழந்தை புரளும் ,ஒருகளிக்கும் ,கையில்  கிடைத்த பொருட்களை பிடித்து கொள்ளும் .

 ஐந்து அல்லது ஆறா மாதம்


    ஐந்து அல்லது ஆறா மாதம் , குழந்தைத் தலையை உயர்த்தி கைகளை ஊன்றி எழும்ப முயற்ச்சிக்கும் .தலையணையில் சாய்த்து உட்கார வைக்கலாம் .


 எட்டாமாதம்

   எட்டாமாதம்   தலையைனையை முட்டு கொடுக்காமல் உட்கார வைக்க முடியும் .பற்கள் முளைக்க துவங்கும் .


ஒன்பது அல்லது பத்தாம் மாதம்

   ஒன்பது அல்லது பத்தாம் மாதம் குழந்தை முழங்கால்களை ஊன்றி தவழத்  தொடங்கும் .


பதினொன்று  அல்லது பன்னிரண்டாவது மாதத்தில்


     பதினொன்று அல்லது பண்ணிரண்டவாது மாதத்தில் ஓர் ஆதாரத்தைப் பிடித்து கொண்டு எழுந்து நிற்கும் .

ஒன்று அல்லது ஒன்றைரை வயதில்

   ஒன்று அல்லது ஒன்றரை வயதில் குழந்தை பிடிப்பு ஏதும் இல்லமால் மெல்ல நடக்க தொடங்கும் . 














Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes