முருங்கை கீரையின் மகத்துவம்
இந்தியாவில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கீரைகளில் முருங்கை கீரையும் ஒன்றாகும். இக்கீரையின்மரம் இலை முதல் அடிவேர் வரை சிறந்த உணவுப் பொருளாகவும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது .
சத்துப் பொருட்கள்
உயிர்சத்துகள்
தாது உப்புகளும்
சுண்ணாம்பு சத்துகள் இரும்பு சத்துக்கள்
வைட்டமின் சி
வைட்டமின் ஏ
முருங்கைக் கீரையின் பயன்கள்
- இக்கீரையில் வைட்டமின் சி மிகுந்திருப்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும்.
- பித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும்.
- இக்கீரையில் வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்னுக்கு ஒளிஊட்டகூடியது.
- தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .
- மலசிக்கலை தடுக்கிறது .
- இக்கீரையில் சுண்ணாம்பு சத்துக்களும் , இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது .
- முருங்கை கீரை சிறுநீரைப் பெருக்க வல்லது .
பொதுவான பயன்கள்
- இக்கீரையை பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும் பொழுது ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்து பொரியலை தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் . உடல் அழகும் ,பலமும் , மதர்ப்பும் கொடுக்கும் .
- முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம் .
- முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி , கை கால் அசதியும் யாவும் நீங்கும் .
- டைமன்ட் கற்கண்டு தூளுடன் கீரையை வதக்கி சாப்பிட்டால் சுவையோடு மட்டுமில்லாமல் . நீர் உஷ்ணம் சம்பந்த பட்ட பிணிகளும் நீங்கும் .
ஆண்களுக்கான பயன்கள்
- முருங்கைக் கீரையை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும் , வீரியமும் உண்டாகும் .
- தாது விருத்தியும் உண்டாகும்
- இதை உணவில் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும் .
பெண்களுக்கான பயன்கள்
- இதை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை தடுக்கலாம் .
- இக்கீரை இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது
- பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும் .
- இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்று நோயும் ,அடி வயிற்று வலியும் நீங்கும் .
- இக்கீரையை விளக்குஎண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி ,வாத மூட்டு வலி உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்தல் வலி நீங்கும்.
- இலையையும் , மிளகையும் நசுக்கி சாறு எடுத்து நெற்றியல் தடவினால் தலைவலி நீங்கும் .
- இலையை அரைத்து வீக்கங்கலின் மீது பூசினால் வீக்கம் தனியும் .
- இக்கீரையை அரைத்து அதனின்று பிழிந்து எடுத்த சாறுடன் கொஞ்சம் சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டையில் தடவினால் இருமல் குரல் கம்மல் நீங்கும் .
- இலையை அரைத்து பிழிந்து சாறு எடுத்து சில துளிகள் கண்ணில் விட்டால் வலிகள் நீங்கும் .
- எள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாய்வால் ஏற்படும் மார்பு வலி நீங்கும் .
இரவில் முருங்கை கீரையை சமைத்து உண்ணக்கூடாது.
எந்த கீரையையாக இருந்தாலும் இரவில் உண்ணக்கூடாது .