மூட்டு வலிக்கு தீர்வு
நாட்டில் வாழும் மக்களில் 50 வயதை தாண்டும் போது கூட மூட்டு வலி, கை ,கால் வலியும் ஆரம்பித்து விடுகிறது .நாம் எவ்வளவு தான் மருந்துகள் சாப்பிட்டாலும் அந்த மருந்துக்கள் அந்த சமயத்துக்கு மட்டும் வலியை போக்குகின்றன .நாட்டில் பலர் இயற்கையில் மூட்டு வலிக்கு உள்ள தீர்வை அறிவதில்லை .இயற்கையாகவே கிடைக்கும் முடக்கத்தான் கீரை மூட்டு வலிகளை ப போக்குவதில் சிறந்தது .இது மூட்டு வலியை போக்குவதால் இதை முடக்கு அறுத்தான் என்று சொல்லபட்டது .காரண பெயராக முடக்கத்தான் என்று அமைந்து விட்டது .இதன் இலையும் ,வேரும் மருந்தாக பயன்படுகிறது .
சுவை
இது இயற்கையாகவே கசப்பு சுவையுடையது .கசப்பு சுவையுடைய உணவு பொருட்கள் தான் ஆயுள் விருத்திக்கு சிறந்தது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை .இனிப்பு சுவை உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது எனவே கசப்புள்ள கீரைகள் ,காய்கறிகள் உணவில் சேர்த்து கொள்வது அவசியம் நமது உடல் ஆரோக்கியத்துக்கு.
ஊட்டசத்து
நீர் 83 .௩%
புரதம் 4 .7%
கொழுப்பு ௦.6 %
தாது உப்பு 2 .3 %
மாவு சத்து 9 .1 %
கலோரி 61
பயன்படுத்தும் முறை
- இதை அரிசியுடன் சேர்த்து அரைத்து அடைதட்டி உண்ணலாம் .
- இக்கீரையை துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிடலாம் .
- மிளகு ரசம் வைத்து குடிக்கலாம் .
- துவையல் செய்து உணவுடன் உண்ணலாம் .
மருத்துவகுணங்கள்
- உடலுக்கு வலுவையும் ஆற்றலையும் தருகிறது .
- நரம்பு சம்பந்தமான பிணிகளை அகற்றுகிறது .
- நரம்பு மற்றும் தசைநார்களுக்கு வலுவூட்டும் .
- இக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் நாளடைவில் கை, கால் ,மூட்டு வலிகள் நீங்கும் .
- இடுப்பு பிடிப்பு , இடுப்பு குடைச்சல் முதலியவற்றிக்கு முடக்கத்தான் கீரை மருந்தாக செயல்படுகிறது .
- இக்கீரை சிறு நீர் பெருக்கி ,மலமிளக்கி ,பசி உண்டாக்கி உடல் உரமாக்கி தடிப்பு உண்டாகும் .
- மலசிக்கலை குனபடுத்துக்கிறது .