வாய் புண்கள் பல காரணங்களால் ஏற்படுகிறது ,இதில் முக்கியமாக ஜீரண கோளாறு,மன அழுத்தம் ,உடல் சூடு ஆகியவற்றால் வாய் புண் ஏற்படுகிறது .வாய் புண்களால் சாப்பிடுவதும் ,பேசுவதும் கூட கஷ்டமாகிவிடுகிறது.இதிலிருந்து மிக எளிதாக பாதுகாத்து கொள்ளலாம் மற்றும் குனபடுத்தியும் விடலாம் பாட்டி வைத்தியத்தில் .
- வாய் புண் வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது .வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்காலம்.
- வெது வெதுப்பான தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்க்கலாம்.இது வாய் புண் சீக்கிரம் குணமாக உதவுகிறது .
- மீன் ,இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .இது உடலில் அமில தன்மையை அதிகபடுத்துகிறது இதனால் வாய் புண் குணப்படுத்துவதும் தாமதமாகிவிடுகிறது .
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும் வாய் புண் குணமடையும் .
- புதினா இலையை அரைத்து அதன் சாற்றை தடவினால் வலி மற்றும் எரிச்சல் குணமாகும் .
- சூட்டை தணிக்க இளநீர் அருந்தலாம் .
- புளிப்பு சுவையுடைய தயிர் ,மோர், உணவில் சேர்த்து கொள்ளலாம் .
- துளசி இலைகளை கழுவி பின்னர் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும் .
- தினமும் மூன்று வேலை கொய்யா இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும் .
- வாழை பூ உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் மற்றும் வாய் புண் குணமாகும் .
- அதிகமான காரம் சேர்த்துக் கொள்வது தவிர்க்க வேண்டும் .