உணவு பழக்கத்தின் மூலம் இளமையை தக்க வைத்து கொள்ளலாம் என்கிறார் பிங்க் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஊட்ட சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன் .
- மூன்று வேலை சாப்பாடு. இதனுடன் இடையிடையில் ஏதேனும் சாப்பிட வேண்டும் . சுண்டல் ,ஓட்ஸ் ,சாலட் ,ஜூஸ் ,மோர் போன்றவை சாப்பிடலாம் .இதனால் உடல் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும் .
- தேவைப்படும் கலோரியின் அளவு ஒருவர்க்குஒருவர் மாறுபடும் ,ஆண்களுக்கு சராசரியாக தேவைப்படும் கலோரி 2425 , பெண்களுக்கு 1875 கலோரி .
- காலையில் சாப்பிடமால் இருக்க கூடாது .காலையில் மட்டும் வயிறு நிறைய சாப்பிடலாம் . மதியம் மற்றும் இரவு நேரங்களில் அளவாக சாப்பிட வேண்டும் .மதியும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் வரும் ,இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் கெடும் .
- நாம் உண்ணும் உணவு சரிவிகத உணவாக இருக்க வேண்டும் .கர்போஹைட்ரடே 50 %,புரதம் 30 %,கொழுப்பு 15 % மற்றும் வைட்டமின் தாது உப்புகள் 5 ஆக இருக்க வேண்டும் .
- உணவை அவசரமாக விழுங்குதல் கூடாது .உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும் .சரசரியாக ஒரு முறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும் . நாம் பொதுவாக 7 முறைதான் மெல்லுகிறோம்.
- தினம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும் .கீரையில் உள்ள நார்சத்துக்கள் கொழுப்பை கரைகின்றன .
- தினம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் . உடல் உஸ்னமாக உள்ளவர்கள் வெந்தையத்தை ஊற வைத்து அதை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் .
- தினம் ஒரு பேரிச்சை பழம் ,கைப்பிடி அளவு பாதாம் பருப்பு இல்லையென்றால் வேர்கடலை சாப்பிடலாம் .
- உணவு சமைக்கும் போது அதிகமாக எண்ணெய் பயன்படுத்த கூடாது .ஒரே எண்ணெய் பயன்படுத்தாமால் நல்லெண்ணெய் ,கடலெண்ணெய் என்று மாற்றி பயன்படுத்தவும் .
- சன்ப்லோவேர்,சப்லோவேர்,ஆயில் பயன்படுத்தவும் . கொழுப்பை கூட்டும் பாமாயில் ,வனஸ்பதி , நெய் ஆகியவற்றை தவிர்க்கவும் .
- வாரம் இரு முறை சிக்கன் சாப்பிடலாம் .இரவில் அசைவ உணவு தவிர்ப்பது நல்லது .
- தினம் ஒரு மனிதன் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
- நாம் உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறைத்தாலே நலமோடு வாழலாம் . ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் உப்பு மற்றும் 3 டீஸ்பூன் சர்க்கரையே உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது .
- பேக்கிங் செய்யப்பட்ட உணவில் , உணவு கெட்டுபோகமால் இருக்க அதிக அளவு உப்பும் ,எண்ணெயும் பயன்படுத்தபடுகிறது .இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல .
- ஒரு நாளைக்கு 2 கப் டீ மட்டும் போதுமானது . க்ரீன் டீ உடலுக்கு நல்லது .
- தினம் இரவில் ஒரு டம்பளர் பால் குடிக்க வேண்டும் சர்க்கரை இல்லமால் .
- மீன்கள் வாரம் இரு முறை சேர்த்து கொள்ளலாம் .
- தினம் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சேர்த்து கொள்ளலாம் .
- குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் .
- தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி வேண்டும் . இவ்வாறு செய்து வந்தால் இளமை என்றும் நம் கையில் .
எண்ணெயில் பொறித்த உணவுகளை விட ,ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் .
மட்டன் மற்றும் பீப் மாதம் ஒரு முறை எடுத்து கொள்ளலாம் .