Tuesday, 3 April 2012

அளவான கத்தரிக்காய் அருமையான மருந்து




    கத்தரிக்காய் என்றாலே நாம் நினைப்பது கத்தரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு ,கரப்பான் என்றுதான்  ஆனால் கத்தரிக்காயை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு வலிமை தரும் சிறந்த மருந்தாகும் .

   கத்தரிக்காய் எளிதில் கிடைக்க கூடியது .இது வெள்ளை ,ஊதா மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கிறது .

  கத்தரிக்காய் நீர் சத்து நிறைந்தது . இதில் வைட்டமின் ஏ ,பி 1 ,பி 2 ,புரதம் ,கார்போஹைட்ரடே , இரும்புசத்து ,கால்சியம்,  மற்றும் சோடியம் , பொட்டசியம் உள்ளன .

  இதில் உள்ள விட்டமின்கள் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

  கத்தரிக்காயுடன்  தக்காளியும்  சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால்  பசியையும் தூண்டி ,பசியின்மையை அகற்றுகிறது .

  ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரக கற்களையும் கரைக்கிறது .

இது மலேரியாவால் ஏற்படும் மண்ணீரல் வீக்கத்தையும்  குணப்படுத்துகிறது .

  உடல் சோர்வடைவது ,மூச்சு விடுதல் சிரமம் , தோல் மரத்து விடுவது தடுக்கபடுகிறது .

  முற்றிய கத்தரிக்காயில் வைட்டமின் ஏ உள்ளது இது உடல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது .

 கண்பார்வை திறனை அதிகபடுத்துகிறது .

கத்தரிக்காய் உடலுக்கு சூடு தரும் காய்கறிகளில் ஒன்று .இதை மழை நேரங்களில் குழம்பு வைத்து சாப்பிட்டால் உடல் கதகதப்பாக இருக்கும் .

கத்தரிக்காய் வற்றல் குழம்பு  வைத்து சாப்பிடலாம் . இது உடல் பருமனை குறைக்கும் , நீர் கனத்தை குறைக்கும் .
கத்தரிக்காய் சூடு தரும் காய் என்பதால்  அரிப்பு ,புண்  ,சொறி , சிரங்கு  உள்ளவர்கள் இதை உண்பதை தவிர்ப்பது நல்லது .

 கர்ப்பிணி பெண்களும் கத்தரிக்காய் தவிர்க்க வேண்டும் .

  கத்தரிக்காயை அளவோடு உணவில் சேர்த்து வந்தால் இது உடலுக்கு வலிமை மற்றும் நன்மையும் தருகிறது .


  

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes