Monday, 9 April 2012

பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை




  • பொதுவாக சுகபிரசவம் அல்லது சிசேரியனில் இரத்த இழப்பு அதிகமாக இருக்கும் . இதை ஈடு செய்ய வேண்டும் . அதற்க்கு பிரசவத்திற்கு பின்னும் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும.

    • கீரைகள் ,பேரிச்சபழம் ,கேழ்வரகு ,கம்பு ,கறிவேப்பில்லை பொடி,போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

    • தினம் ஒரு கீரை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

    • பிரசவத்திற்கு பின் உடலை நன்கு பராமரிக்க வேண்டும் .

    • குழந்தைக்கு தாய் பால் மட்டும் உணவு என்பதால் , தாய்மார்கள் தங்கள் உணவுகளில் தனி கவனும் செலுத்த வேண்டும் .இதனால்  குழந்தையும்  நல்ல வளர்ச்சியுடன் இருக்கும் .

    • கொழுப்பு  சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் .

    • உணவில் புரதசத்து ,நார்சத்து ,இரும்பு சத்து ,  மற்றும் கால்சியம் சத்து  இருக்க வேண்டும் .

    • குழந்தைக்கு பால் கொடுப்பதால்  அதிகமாக உணவில் புரதம் மற்றும் கால்சியம் சேர்த்து கொள்ள வேண்டும் .

    • பால் ,பால் சார்ந்த பொருட்கள் ,மீன் ,நண்டு ,இறால் ,சோளம்  போன்ற கால்சியம் சத்து அதிகம் கொண்ட  உணவுகளை  உன்ன வேண்டும் .

    • தினமும் குறைந்தது இரண்டு டம்பளர் பால் குடிக்க வேண்டும் .

    • பாதம் ,பிஸ்தா ,அக்ரூட்,பச்சை வேர் கடலை ,மீன் , முட்டை போன்ற  புரத சத்து அதிகம் உள்ள உணவுகளை உன்ன வேண்டும் இதனால் பால் நன்றாக சுரக்கும் .

    • தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் ,இது பால் நன்றாக சுரக்கவும் ,மல சிக்கல் பிரச்சனை வராமால் தடுக்கவும் உதவுகிறது .

    • அதிக கொழுப்பு உள்ள உணவு ,கிழங்கு வகைகள் மற்றும் ,தேங்காய் போன்ற உணவுகளை  பிரசவம் ஆன பின் ஒரு மாத காலத்திற்கு தவிர்க்க வேண்டும் .
    .இதை  சாப்பிடுவதால் வாயு ,மலச்சிக்கல் ,அஜீரண கோளறு ஏற்படும் .

    • இஞ்சி பூண்டு ,மிளகு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

    • எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும் .

    • சுறாபுட்டு உணவில் சேர்த்து கொண்டால் பால் நன்றாக சுரக்கும் . 





    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

     
    Design by Free WordPress Themes