பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வருவதற்கு , 4 செம்பருத்தி பூக்களை அரைத்து பசையாக செய்து கொள்ளவேண்டும் . இதை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் 7 நாட்களுக்கு சாப்பிட்டு வரலாம் .
செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூளாக்கி , ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும் மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சரியாக வரும் .
இருமல் தீர
செம்பருத்தி பூ இதழ்கள் 15 எடுத்து கொள்ள வேண்டும் .அதனுடன் ஆடாதோடை இலை மூலிகை தளிர் இலைகள் மூன்றை சேர்த்து நசுக்கி , 2 தம்பளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி அதில் 1 /2 தேக்கரண்டி தேன் கலந்து காலை , மாலையில் 3 நாட்கள் குடித்து வந்தால் இருமல் தீரும் .
தலையில் பேன்கள் குறைய
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் தலை பேன்கள் குறையும் .
இதயம் பலம் பெற
செம்பருத்தி பூவை பசுமையாகவே அல்லது உலர வைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை , மாலையில் குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்.
சிறுநீர் எரிச்சல் குணமாக
4 செம்பருத்தி இலைகளை 2 தம்பளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி ,வடிகட்டி கொள்ள வேண்டும் ,இதனுடன் கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும் .
4 செம்பருத்தி மொட்டுகளை 2 தம்பளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டுடன் சேர்த்து குடித்து வந்தாலும் சிறுநீர் எரிச்சல் குணமாகும் .