Tuesday, 10 April 2012

இரத்த சோகையை குணமாக்கும் பீட் ரூட்





     பீட்ரூட்டில் நிறைய சத்துகள் உள்ளன .இதில் வைட்டமின் சி ,பொட்டசியம் ,போலாசின் ,பீட்ட கரோட்டின் ,மாவுசத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளன .

    பெண்கள் அதிகம் பாதிக்கபடுவது இரத்த சோகையினால்,இதனை தினம் பீட்ரூட்டை உணவில் சேர்ப்பதன் மூலம் குணப்படுத்தலாம் .

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள் 

இரத்த சோகை நோய் 

  •   பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாறுடன் தோய்த்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகமாகும் .
  •  பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது .
  • இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகபடுத்தி இரத்த சோகை நோய் வராமால் தடுக்கிறது .
  • உடல் சோர்வு அடைவதையும் தடுக்கிறது .
  • இதில் உள்ள வைட்டமின் சி உணவில் இரும்பு சத்தை உறிச்ச  உதவுகிறது .
  • நமது உடலில் ஆக்சிஜன் உறிச்சும் சத்தியை அதிப்படுத்துகிறது.
இதய நோய்

  •    பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள் ,இரத்தில் நைட்ரிக் ஆக்சைடுகளை  உருவாக்கின்றன .இது இரத்த குழாய்கள் விரிவடைய உதவுகின்றன .இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது ,இரத்த அழுத்தமும் குறைக்கப்படுகிறது .
  • இதய நோய் வரமால் தடுக்கிறது .
  • பீட்ரூட்டில் உள்ள நார்சத்து கெட்ட கொலஸ்டிராலை குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்திகிறது .
  • பீட்ரூட்டில் அதிக அளவு  பொட்டசியம் உள்ளது .இது இதயம்சரியாக இயங்கக உதவுகிறது .இதனால் இதய நோய் வராமால் தடுக்கிறது .
தோல் நோயிக்கு

  •  பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து ,சொறி ,சிரங்கு ,பொடுகு  ஆறாத புண்கள் மேல் தடவினால் அனைத்தும் குணமாகும் .
  • தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்பளங்கள் ஏற்படாது ,விரைவில் குணமாகும் .
 கர்ப்பிணி பெண்களுக்கு

  •   பீட்ரூட்டில் கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் உள்ளன .
  • பிரசவ காலத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .
  • குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் .
  • கர்ப்பிணி பெண்கள்  உணவில்   பீட்ரூட் சேர்த்து கொள்ள வேண்டும் .
  • போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் நோயையும் தடுக்கலாம் .

செரிமானத்திற்கு

  •  பீட்ரூட்டில் உள்ள நார்சத்து ,உணவு செரிக்க உதவுகிறது .
  • மலசிக்கல் வராமால் தடுக்கிறது .
  • மூல நோயயை குணப்படுத்துகிறது .
  •   பீட்ரூட் சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் .
  • இது இயற்க்கை மலமிளக்கியாகவும் செயல்படுகிறது  .

சிறுநீரக நோய்

  •     பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகம் சுத்திகரிக்கப்படும் .
  • பீட்ரூட்டை  அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம் .
பித்த நோய்

  • பீட்ரூட் பித்தத்தை தடுக்கிறது .
  • பீட்ரூட் சாறுடன் ,வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர பித்தப்பை      சுத்திகரிக்கப்படும் .
  • பித்தத்தால் ஏற்படும் வாந்தியையும் குறைக்கிறது .
கண் நோய்

  • பீட்ரூட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ( வைட்டமின் ஏ )கண் புரை நோய் வரமால் தடுக்கிறது .
  • கண் பார்வை நன்றாக தெரியவும் உதவுகிறது .

புற்றுநோய்

  • பீட்ரூட்டில் உள்ள பீட்டா கரோட்டின் புற்று நோய் வராமால் தடுக்கிறது .
  • புற்று நோய் பரவுவதையும் தடுக்கிறது .
  • ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோயைகளை தடுக்கிறது .
  • உடலில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகப்படுத்துகிறது .
மூச்சு திணறல்

  • பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி ஆஸ்துமா நோய் வராமால் தடுக்கவும் மற்றும் நுரையீரல் புற்று நோய் வராமால் தடுக்கிறது .
  • இது  நமது உடலில் ஆக்சிஜன் உறிஞ்சும் சத்தியை அதிகப்படுத்துகிறது .

குறிப்பு

  • பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்க கூடாது இதனால் இதில் உள்ள வைட்டமின் சி அழிந்துவிடும் .
  • பீட்ரூட்டை மூடி சமைக்க கூடாது இதனால் இதில் உள்ள ஆக்சா லிக்     அமிலம் வெளியேராமால் இருந்து விடும் .           



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes