Friday, 6 April 2012

அளவான பகல் குட்டி தூக்கம் நல்லதா ?



  • பகலில் தூங்கினாலே உடல் குண்டாகி விடும் என்று பகலில் தூங்காமல் இருப்பவருக்கு ஒரு நற் செய்தி .பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும் என்பது தவறான கருத்து .வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது ஆய்வு முடிவுகள் .

  • இரவில் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது உடலுக்கு நல்லது .

  • நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகதான்  அமைக்க பட்டுள்ளது    .காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை செய்வதால் உடலும் மனமும் சோர்வடைகிறது . அந்த நேரத்தில் சிறிது நேரம் குட்டி தூக்கம்  நம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சி பெற வைக்கிறது .

  • கலிபோர்னிய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது  என்னவென்றால்  பகலில் போடும் குட்டி தூக்கம் மூளையின் செயல்  திறன் அதிகரித்து அறிவு திறன் வளர்கிறது என்கிறது .

  • பகல் நேரத்தில் தூங்குவது இதயத்திற்கும் நல்லது என்கிறது .

  • பகலில் அளவாக தூங்கினால் மட்டுமே நல்லது .வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் என்பது ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று நீண்டால்  நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது .

  • அளவாக தூங்கி நலமாக வாழுங்கள் அறிவுடன் .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes