பல்லு போனால் சொல்லு போச்சு என்பதெல்லாம் அந்த காலம் , இன்று ஆரோக்கியமான உடல் மற்றும் இதயத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம் என்கிறது மருத்துவ உலகம் .
பற்களில் படிந்து இருக்கும் ஆபத்தை உண்டாக்கும் பாக்டீரியக்கள் தொண்டைக்கு பரவி இரத்தத்துடன் கலந்து இதயத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது .
பல் துலக்குவதன் மூலம் இதயத்தை பலபடுத்தலாம் என்கிறன்றனர் மருத்துவ நிபுணர்கள் .
பல் சொத்தையின் அறிகுறிகள்
- பல்லில் வலி
- ஈறுகளில் வீக்கம்
- வாயின் வெளியே வீக்கம்
- பல் கருப்பு நிறமாக மாறுவது
- பல்லில் குழி ஏற்பட்டு உணவு பொருட்கள் தங்குவது .
- குளிர்ந்த அல்லது சூடான உணவு சாப்பிடும் போது பல்லில் கூச்சம் ஏற்படுவது .
தவிர்க்க வேண்டியவை ?
- அடிக்கடி தேனீர் ,காபி போன்றவை குடிப்பது .
- குளிர்ந்த நீரை குடிப்பது .
- குளிர்பானங்கள் குடிப்பது .
- அதிகம் ,இனிப்பு ,காரம் சாப்பிடுவது .
- பாக்கு ,பீடா போடுதல் ,சிகெரட் புகைப்பது .
- மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் .
ஆரோக்கியமான பற்களுக்கு
- தினம் இரண்டு முறை பல் துலக்குவது .
- இனிப்பான உணவு பொருட்களை சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும் .
- மூன்று அல்லது ஐந்து மாதத்திற்கு ஒரு முறை பிரசை மாற்ற வேண்டும் .
- ப்ளுரைடு உள்ள பற்பசைகளை பயன்படுத்த வேண்டும் .
உறுதியான பற்களுக்கு ஆரோக்கியமான உணவு ?
- பற்கள் அயோடின் மற்றும் பாஸ்பரஸ் சத்து குறைவினால் விரைவில் வலுவிழக்கின்றன .இதை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும் .
- வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு ,சாத்துக்குடி , எலுமிச்சை ,பப்பாளி ,திராட்ச்சை இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் சேர்த்து கொள்ள வேண்டும் .
- கேழ்வரகு ,மீன் ,கீரை வகைகள் ,முட்டைக்கோஸ் காலிபிளவர் அடிக்கடி சேர்த்து கொள்ளவும் .
- தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் .
- தினம் 2 டம்பளர் பால் அவசியம் .
- இனிப்பு ,உப்பு ,காரத்தை குறைக்கவும் .
- பூண்டு ,வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும் .
- வெண்டைக்காய்,வெள்ளரிக்காய் ,மாங்காய் .கேரட்களை பச்சையாக கடித்து தின்பதால் பற்கள் பலம் பெறும்.
- கால்சியம் சத்து அதிகம் உள்ள பால் , முட்டை சாப்பிடுவது பல்லுக்கு ஆரோக்கியமும் ,அழகும் ஏற்படும் .